(maruti suzuki swift sport expected launch)
சுசுகி நிறுவனத்தின் Swift Sport 2017 மாடலானது சமீபத்தில் இடம்பெற்ற மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்த கார் ஐரோப்பிய சந்தைகளிலும் அதன் பின் மற்ற நாடுகளிலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சுசுகி Swift Sport மாடலில் டர்போ சார்ஜ்டு இன்ஜின் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை ஹேட்ச்பேக் மாடல்களில் 1.6 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் 8.1 நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என சுசுகி தெரிவித்துள்ளது.
OUR GROUP SITES
maruti suzuki swift sport expected launch