2022 ஆண்டளவில் சுவிட்சர்லாந்தின் 15% வாகனங்கள் இலத்திரனியல் மயமாயிருக்கும்?

0
598
Switzerland electric vehicles industry, electric vehicles industry, vehicles industry, Switzerland electric vehicles, electric vehicles, Tamil Swiss news, Swiss Tamil news

(increase proportion vehicle registration)

திங்களன்று மின்சாரம் மற்றும் இயக்கம் துறை பிரதிநிதிகளை சந்தித்த ஸ்விஸ் எரிசக்தி அமைச்சர் Doris Leuthard, சுவிஸ் வீதிகளில் புதிய மின்சார வாகனங்களை எவ்வாறு அதிகரிப்பது என கலந்தாலோசித்தார்.

2022 ஆம் ஆண்டளவில் புதிய மின் வாகன பதிவு விகிதம் 2.7% முதல் 15% வரை அதிகரிக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

சில அண்டை நாடுகளில், இலத்திரனியல் வாகன கொள்முதலை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான பிரீமியம் சலுகை, சுவிட்சர்லாந்தில் வழங்கப்படுவதில்லை என, சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு (DETEC) மத்திய துறை கூறியது.

ஆனால் கார் வரி விலக்கு போன்ற ஏற்கனவே உள்ள சலுகைகள், தொடர்ந்தும் வழங்கப்படும். மேலும் அரசாங்கம், ரீசார்ஜிங் வலையமைப்பு உள்கட்டமைப்பின் விரிவாக்கத்தை தொடர்ந்தும் வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

சுவிஸ் ஏஜென்சி திட்டத்தின் கீழ், உள்ளூர் நகராட்சிகள் மற்றும் பரந்த பொதுமக்களை இலக்காகக் கொண்ட மின் இயக்கத்தின் மீதான விழிப்புணர்வு தூண்டுதல் பிரச்சாரங்களுக்கு நிதி திரட்ட திட்டமிடப்படுகிறது.

increase proportion vehicle registration, increase proportion vehicle, vehicle registration, Electric vehicle, mobility industry, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites