ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்!

0
914
bullion ceremony near Jolarpet - 17 people injured injured

bullion ceremony near Jolarpet – 17 people injured injured

ஜோலார்பேட்டை அருகே நடந்த எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம் அடைந்தனர். ஜோலார்பேட்டை அடுத்த சந்தைகோடியூரில் எருது விடும் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கோயில் ஊர்கவுண்டர் கே.சி.சக்திவேல் தலைமை தாங்கினார். விழா காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் பருகூர், வாணியம்பாடி, ஆம்புர், ஆலங்காயம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதியிலிருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இதில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த குரிசிலாப்பட்டு அடுத்த முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.50,555ம், வக்கனம்பட்டியை சேர்ந்த காளைக்கு 2ம் பரிசாக ரூ.40,444ம், பெரியகரம் பகுதியைச் சேர்ந்த காளைக்கு 3ம் பரிசாக ரூ.30,333 உட்பட 25 பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், 26 முதல் 35 வரை சிறப்பு பரிசுகளும், முதல் 5 பரிசுகள் பெறும் காளைகளுக்கு ஜாக்பாட் பரிசு 5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மேலும், இந்த விழாவில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். இதில் மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவத்துறை சார்பில் முதலுதவி செய்யப்பட்டது. மேலும், சப்இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், தீயணைப்புத்துறை அலுவலர் ர.பன்னீர்செல்வம் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

More Tamil News

Tamil News Group websites :