ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் – கருணாஸ்!

0
299
Jayalalitha live surely iam minister - Karunas

Jayalalitha live surely iam minister – Karunas

தமிழக அரசினை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் புதிய அரசை உருவாக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காரணமாக அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை வழங்கினர். அந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதன் காரணமாக இன்று தி.மு.க சார்பில் அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட முக்குலத்தோர் புலிப்படை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேசுகையில், “நேற்று தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழக முதல்வராக இருக்கும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டையே தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுவது எவ்வளவு பெரிய கேவலம் என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய கருணாஸ், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியினை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்தான் நான். ஆனால் மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு நேற்று எனக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :