முன்னணி வீரர் விலகல்! : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்!

0
521
Bangladesh name Mustafizur replacement vs Afghanistan

(Bangladesh name Mustafizur replacement vs Afghanistan)

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசூர் ரஹ்மான் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அபுல் ஹாசன் பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக முஷ்தபிசூர் ரஹ்மான் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். முக்கிய இருபதுக்கு-20 போட்டிகளில் அவரது பங்களிப்பு அதிகமாகவே இருந்தது.

எனினும் ஐ.பி.எல். தொடரின் போது அவரின் பெருவிரலில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மூன்று வாரங்கள் அளவில் ஓய்வில் இருக்க வேண்டும் என கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இதன் காரணமாக அவரின் இடத்துக்கு வேகப்பந்து வீச்சாளர் அபுல் ஹாசன் அழைக்கப்பட்டுள்ளார். அபுல் ஹாசன் பங்களாதேஷ் அணிக்காக 3 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் 4 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடிவுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடர் ஜுன் 3,5 மற்றும் 7ம் திகதிகளில் இந்தியாவின் டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

<<Tamil News Group websites>>