குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு – சாகுபடி பணி தீவிரம்!

0
843
Sugar Rain Extinction Throughout Kumari intensive Job Season

Sugar Rain Extinction Throughout Kumari intensive Job Season

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று சாரல் மழை பெய்த நிலையில் கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 67 மி.மீ மழை பதிவாகி இருந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது. நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 67 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 4.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 665 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 417 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 60.30 அடியாக இருந்தது. அணைக்கு 212 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்1ல் 11.31 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 27 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்2ல் 11.41 அடியாக நீர்மட்டம் இருந்தது.

அணைக்கு 44 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொய்கையில் 13.90 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 53.07 அடியாக நீர்மட்டம் உள்ளது.மாவட்டத்தில் நேற்று காலை வரை பேச்சிப்பாறையில் 17.6 மி.மீ மழை பெய்திருந்தது. பெருஞ்சாணியில் 19.6, சிற்றார்1ல் 23, சிற்றார்2ல் 33, மாம்பழத்துறையாறில் 11, இரணியல் 5.2, ஆனைக்கிடங்கு 10, குளச்சல் 7, அடையாமடை 23, கோழிப்போர்விளை 67, முள்ளங்கினாவிளை 17, புத்தன் அணை 17.4, திற்பரப்பு 21.4, நாகர்கோவில் 3.8, சுருளோடு 21, ஆனைக்கிடங்கு 3.4, பாலமோர் 27.2, கொட்டாரம் 17 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

இந்நிலையில் குமரிமாவட்டத்தில் பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரமாக தொடங்கி உள்ளனர். பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணி நடப்பதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குளத்து பாசனப்பகுதியில் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள் சாரல் மழையை பயன்படுத்தி நாற்று சுசீந்திரம் ஆஸ்ராமம் உள்ளிட்ட பகுதிகளில் நாற்று பாவும் பணி நடை பெற்று வருகிறது.

More Tamil News

Tamil News Group websites :