தலைமுடியை ஸ்டைலாக வெட்டியதால் கண்டிப்பு – மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

0
986
Stencil hair stylist student committed suicide

Stencil hair stylist student committed suicide

திருப்பூரில் தலைமுடியை ஸ்டைலாக வெட்டிய மாணவனின் தந்தை தலைமுடியை மீண்டும் மாற்றிவெட்டி விட்டதால் 8 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலம்பாளையத்தை சேர்ந்த தையல் தொழிலாளியின் மகன், நேற்று முன்தினம் சலூனுக்கு சென்று தனக்கு பிடித்தவாறு முடிவெட்டி உள்ளார். இதைப்பார்த்து, கோபமடைந்த அவனது தந்தை, பள்ளி திறக்க உள்ள நிலையில் இதுபோன்று முடிவெட்டக் கூடாது என்று கண்டித்ததுடன், மீண்டும் சலூனுக்கு கூட்டிச்சென்று மகனின் தலைமுடியை ஒழுங்காக வெட்டியுள்ளார்.

இதனால், விரக்தியில் இருந்த அந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவனின் தற்கொலை குறித்து வேலம்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தது.

More Tamil News

Tamil News Group websites :