தடை செய்யப்பட்ட பொலித்தீன் விற்பனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
500
Use polythene, rigifoam, shopping bags banned again action

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. Use polythene, rigifoam, shopping bags banned again action

பொலித்தீன் உற்பத்திகளுக்கு தரக்கட்டுபாட்டு சபை சில விதிகளை அறிமுகப்படுத்தி அதற்கேற்றவாறு உற்பத்தி செய்யுமாறு வலியுறுத்தியிருந்தது.

அத்துடன் ஏற்கனவே சந்தையில் காணப்பட்ட பொலித்தீன் உற்பத்தி பயன்பாட்டுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

எனினும் வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக குறித்த பொலித்தீன் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது சுகாதார பரிசோதர்கள் மூலம் வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டு குறித்த பொலித்தீன்களை தடைசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்துடன் உரிய தரத்துடன் உற்பத்தி செய்யப்படும் உணவு பொதி செய்யும் பொலித்தீன் வகைகளுக்கு உரிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் தினத்தில் உரிய தரத்துடனான உணவு பொதி செய்யும் பொலித்தீன் உற்பத்தியில் இருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் அனுர ஹேரத் குறிப்பிட்டார்.
Use polythene, rigifoam, shopping bags banned again action

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

The post மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் appeared first on TAMIL NEWS.