கேரளாவை உலுக்கிய கௌரவ கொலை : 14 பேர் மீது  வழக்கு

0
684
registered Kerala State Police 14 including girls father brother

Mregistered Kerala State Police 14 including girls father brother

கலப்பு திருமணம் செய்த கொண்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து, பெண்ணின் தந்தை, சகோதரன்  உள்ளிட்ட 14 பேர் மீது  கேரள மாநிலம் பொலிஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சூரியகவளா பகுதியை சேர்ந்தவர் கெவின் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணொரவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு பெண் வீட்டில் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது திடீரென பெண்ணின் சகோதரன் உட்பட 12 பேர் வீட்டுக்குள்  புகுந்துள்ளனர். கெவினை சரமாரியாக தாக்கியதுடன், அவரை ஒரு வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, கோட்டயம் மாவட்ட பொலிஸில் தனது கணவர் கெவினை  சகோதரன் மற்றும் அவரது கும்பல் கடத்திச்சென்று விட்டது எனவும் அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டு தரவேண்டும் என்றும் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கெவின் மற்றும் பெண்ணின் சகோதரனையும் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், தென்மலை பகுதியருகேயுள்ள ஒரு குட்டையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் கெவின் சடலமாகக் மிதப்பதாக பொலிஸாருக்க தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக் விரைந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துதுள்ளதுடன்,  கொலை தொடர்பில் பொலிஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் பெற்றோர் எதிர்ப்பிபை மீறி  திருமணம் செய்ததால் கௌரவ கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை வழக்கில் பெண்ணின் தந்தை சாக்கோ, சகோதரர் சானு உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் சகோதரன் உட்பட 6 பேரை  பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை தேடி வருகிறார்கள்.

இது குறித்து புதுப்பெண் நினு கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறும்போது, காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் தனது கணவர் கொலை செய்யப்பட்ட எனது கணவர் கடத்தப்பட்டது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தபோது 10 ஆயிரம் ரூபா கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதாக குற்றம்சாட்டினார்.

கௌரவ கொலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும், தலித் அமைப்புகளும் இன்று கோட்டயம் மாவட்டத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனால், கோட்டயம் மாவட்டத்தில் இன்று இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இளைஞர் கௌரவ  கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

registered Kerala State Police 14 including girls father brother

More Tamil News

Tamil News Group websites :