விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால்  இராஜினாமா – குமாரசாமி

0
473
Karnataka Chief Minister Komagasamy said problem opening Kavirai

Karnataka ready dismiss agricultural loans resign chief minister resignation

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், அது முடியாவிட்டால் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாகவும் இந்திய கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில முதல்வர்  குமாரசாமி டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வேன் என நான் தெளிவாக கூறியிருக்கிறேன். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்திற்குள் அதனைச் செய்வேன் என தேர்தலின்போது வாக்குறுதியும் அளித்திருந்தேன். அது உண்மை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் எனக்கு சற்று அவகாசம் வேண்டும். இன்று எனக்கு சில வரையறைகள் உள்ளன.

நான் கூறியபடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால், நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவேன் என்று கூறியிருக்கிறேன். அதேபோல் முதல்வர் பதவியையும் இராஜினாமா செய்வேன். ஏன் இன்னும் சில காலம் காத்திருக்க முடியாதா? விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்வான வழிகாட்டி விதிமுறைகள் தயாராகவுள்ளன. அதனை பெங்களூரில் இன்று புதன்கிழமை மக்களிடையே தெரியப்படுத்த உள்ளேன்.

விவசாயக் கடன் தொடர்பாக எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளை கேள்விப்பட்டேன். நான் அமைதியாக இருக்கவில்லை. அமைதியாக இருக்க நான் ஒன்றும் எடியூரப்பா இல்லை. நான் முதல்வராக இருக்கும் வரை மக்களுக்காக சேவை செய்வேன். விவசாயக் கடன் விவகாரம் மட்டுமல்லாமல் மக்கள் தொடர்பான பிற விஷயங்களிலும் சிறந்த முறையில் பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

Karnataka ready dismiss agricultural loans resign chief minister resignation

More Tamil News

Tamil News Group websites :