இந்தியாவிலேயே அதிக நியாயவிலைக் கடைகளை கொண்ட மாநிலம் தமிழகம்!

0
697
Minister Kamaraj - Tamil Nadu reasonable shop India

Minister Kamaraj – Tamil Nadu reasonable shop India

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், சைதாப்பேட்டை எம்எல்ஏ  மா.சுப்பிரமணியன், தனது தொகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகள், சொந்தக் கட்டிடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், மற்ற மாநிலங்களில், 900 அட்டைகளுக்கு 1 கடை என உள்ள சராசரியை விட, தமிழகத்தில் 560 குடும்ப அட்டைகளுக்கு 1 கடை என உள்ளது, மேலும் இந்தியாவிலேயே அதிக நியாயவிலைக்கடைக்கொண்ட மாநிலம் தமிழகம் என்று தெரிவித்தார்.

மேலும், ஆண்டுதோறும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :