மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0
550
mannar human body parts recover start inquire court order

மன்னார் பொது மயான வளாகத்திற்கு பின்னாலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். mannar human body parts recover start inquire court order

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து நேற்றைய தினம் இந்த மனித எலும்புகள் மீட்கப்பட்டன.

குறித்த வளாகத்தில் நேற்று மாலை 4.15 மணியளவில் முதற்கட்டமாக அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த அகழ்வுப்பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

இதன் போது சந்தேகத்திற்கு இடமான எலும்புத்துண்டுகள், பற்கள் என பல எச்சங்கள் அகழ்வில் இருந்து மீட்கப்பட்டன.

இது தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
mannar human body parts recover start inquire court order

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

The post மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் appeared first on TAMIL NEWS.