மங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது

0
428
finance minister mangala samaraweera lie international loan bandula

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தேசிய கடன் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். finance minister mangala samaraweera lie international loan bandula

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஆண்டு செலுத்த வேண்டிய மொத்த கடன் 2845 பில்லியன் ரூபாவாகும் என்பதோடு அடுத்த வருடம் இரட்டிப்படையும் எனவும் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

ஆனால் தேசிய அரசாங்கத்தின் கடந்த 3 வருட காலப்பகுதியிலேயே மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதோடு உற்பத்தி மற்றும் விநியோக செலவுகளும் அதிகரித்துள்ளன.

இதனால் கடன்களை மீள செலுத்துவதற்காக அரசாங்கம் அனைத்து துறைகளிலும் வரி வீதத்தினை அதிகரித்துள்ளது.

ஆனால் வெளிநாட்டு கடன்கள் இதுவரை காலம் செலுத்தப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

இவ்வாறிருக்க அரசாங்கம் எதற்காக தேசிய கடன் தொடர்பில் போலி கருத்துக்களை முன்வைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
finance minister mangala samaraweera lie international loan bandula

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

The post மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் appeared first on TAMIL NEWS.