​தென் தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

0
497
Southern southwest monsoon begins

Southern southwest monsoon begins

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, வடகேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. அதே போல் மத்திய கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரள பகுதிகளில் நேற்று துவங்கிய தென் மேற்கு பருவகாற்று, தென் தமிழகத்தில் வீச தொடங்கியதால், தென் தமிழக பகுதிகளில், தென் மேற்கு பருவமழை துவங்கி உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வால்பாறையில், 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை, இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும், என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :