தலைமறைவாகியிருந்த விமானப்படை வீரர் கைது

0
523
escape air force men arrest seenakuda police division latest news

கடமையிலிருந்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் தலைமறைவாகியிருந்த விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். escape air force men arrest seenakuda police division latest news

இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு கடமையிலிருந்து வேளையில் தனது ரீ 56 ரக துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள் மற்றும் அவருடன் கடமையிலிருந்த சக வீரர் ஒருவரின் ஒரு மகசீன் அதில் காணப்பட்ட 90 ரவைகளுடன் தலைமறைவாகியிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் சீனக்குடா பொலிசாரின் தலைமையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு பெரிய மடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய அழகையா அனுஷன் என்ற விமானப்படை வீரரே இவ்வாறு தலைமறைவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த விமானப்படை வீரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
escape air force men arrest seenakuda police division latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை