சுவையான மாம்பழ சட்னி

0
1041
tasty mango chutney

(tasty mango chutney )

முக்கனிகளில்  ஒன்றான  மாம்பழம்,  அதன்  சுவைக்காகவே  தனிச்சிறப்பு  பெற்றது.   அதனால் தான்  மாங்காய்,  மாம்பழம்  வைத்து  தயாரிக்கப்பட்ட   அத்தனை  உணவு  பதார்த்தங்களுக்கும் மக்கள்  இன்றும்  அடிமையாக  உள்ளனர்.  என்னதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும்  நம்  முன் ஒரு மாம்பழத்  துண்டை  வைத்தால்  வேண்டாம்  என்று  யாரும்  சொல்லமாட்டார்கள்.

மாங்காயில் செய்த ஊறுகாய், மீன்குழம்பு, புளிக்குழம்பில்  போட்ட மாங்காயை சாப்பிட இன்றும் நம் குடும்பங்களில் போட்டி நிலவும். ஆனால், சில மாம்பழங்கள் இனிப்பு இல்லாமல் சாப்பிட முடியாத அளவிற்கு அதிகமான புளிப்பு சுவையுடன் இருக்கும்.  அதை என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்காவே இந்த சுவையான மாம்பழ சட்னி ரெசிபி.
தேவையானவை :
மாம்பழம் – 2
கடுகு – தாளிக்க
வர மிளகாய்-2 வறுத்த
சீரகப் பொடி- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
சர்க்கரை- கால் கப்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
நீர் – 1 கப்
செய்முறை ;-
புளித்த மாம்பழத்தை எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் .
அடுப்பில் கடாயை வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெயை ஊற்றி கடுகை தாளித்த பின் வரமிளகாயை அதில் சேர்க்கவும்.
பின் சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்த மாம்பழத்துண்டுகளை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது நேரம் மூடி வைத்திருக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து மாம்பழம் நன்றாக வெந்த பிறகு அதனை மசித்து அதில் சீரகப் பொடி, உப்பு மற்றும் சர்க்கரையை சேருங்கள். இதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்சம் சுண்ட வைத்தால் சுவையான மாம்பழ சட்னி தயார்.
tags;-tasty mango chutney