“ஒரு காலுடன் துடுப்பெடுத்தாடினார் வொட்சன்” : மனம் திறந்த சென்னை வீரர்!!!

0
153
Shane watson batted one Leg said bravo news Tamil

(Shane watson batted one Leg said bravo news Tamil)

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கிண்ணத்தை மூன்றாவது முறையாக வெற்றிக்கொண்டது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஷேன் வொட்சன். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இவர் முதல் 10 பந்துகளில் எவ்வித ஓட்டங்களும் இன்றி தடுமாறி வந்தார்.

எனினும் இறுதியில் அதிரடி சதம் விளாசிய இவர், 57 பந்துகளில் 117 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட டிஜே பிராவோ வொட்சன் ஒரு காலின் உதவியுடன் மாத்திரமே துடுப்பெடுத்தாடினார்  என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

பிராவோ கூறுகையில், “வொட்சன் அனுபவம் வாய்ந்த வீரர். அவரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் நாம்  மூன்றாவது முறையும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளோம்.

போட்டிக்கு முன்னர் வொட்சனின் ஒரு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த உபாதையுடன் போட்டியில் கலந்துக்கொண்டு அதிரடியை வெளிப்படுத்தினார். ஒரு காலின் உதவியுடன் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக சென்னை அணி தடைபெற்றதால் நாம் ஒன்றினைந்து விளையாடாமல் இருந்தோம். எனினும் கிண்ணத்தை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.

<<Tamil News Group websites>>

Shane watson batted one Leg said bravo news Tamil