யாழில் இன்று அதிகாலை ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு

0
541
police claimed attacker killed serious weapon Hambantota division

(sword attack jaffna journalist today)
யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை 4.30 மணியளவில் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ராஜேந்திரன் (வயது 56) என்பவர் மீதே, யாழ்.கொழும்புத்துறை துண்டிப் பகுதியில் வைத்து இந்த வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழில் இருந்து இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை பத்திரிகை நிறுவனமான காலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான இவர் இன்று அதிகாலை 4.30 கொழும்புத்துறை துண்டிப் பகுதிக்கு பத்திரிகை விநியோகிப்பதற்காக வந்துள்ளார்.

இதன்போது, 5 மோட்டார் சைக்கிளில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் வந்து கோடரி மற்றும் வாள்களினால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

வயரினாலும் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்தில் இருந்து கத்திய போது, வாள்வெட்டுக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை