போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிந்த் அதிரடி அறிவிப்பு!

0
630
Govt Action Act fake news removed, malaysia tami news, malaysia, malaysia news, gov remove fake news,

{ Govt Action Act fake news removed }

மலேசியா: 2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அகற்றும் பரிந்துரை ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் கோபின் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

அந்த பரிந்துரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் சட்டத்துறை அலுவலகம் மற்றும் முக்கிய தரப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிவதோடு தேவையான ஆவணங்களை தனது அமைச்சு தயார் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஜூன் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆவணங்களைத் தயார் செய்யும் பணிகள் முழுமையடையும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், அதனைத் தயார் செய்வதற்கு அதிக காலம் பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.

இது சட்டத்திருத்தம் அல்லது புதிய சட்டத்தைக் கொண்டு வருவது அல்ல. மாறாக, இருக்கின்ற சட்டத்தை மீட்டுக்கொள்வதாகும். புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்வதைக் காட்டிலும் இந்த சட்டத்தை மீட்டுக்கொள்வது தெளிவாகவும் எளிமையானதாகவும் இருக்கும் என இன்று தலைநகரிலுள்ள விஸ்மா பெர்னாமாவிற்கு வருகைப் புரிந்த கோபின் சிங் டியோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஏதாவது ஒரு சட்டத்தை அகற்றுவதாக இருந்தால் மூன்று விவகாரங்களை முன்கூட்டி சீர்த்தூக்கி பார்க்கப்படும். அதாவது, அந்த சட்டத்தின் கீழ் எந்த தனிநபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனரா என்பது பார்க்கப்படும். இருக்கின்ற சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்றால் இதற்கு முன்பு உள்ள வேறு ஏதாவது சட்டங்கள் இவ்விவகாரங்களில் பயன்படுத்த முடியுமா? என்பது பார்க்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

முன்னராக, ஊடக சுதந்திரம் உள்பட நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதியில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து வினவப்பட்ட போது, ஊடகங்கள் இக்காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இருப்பதை உறுதி செய்ய பல சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நம்மிடம் சட்டங்கள் உள்ளன. உண்மையில்லாத செய்தி மற்றும் அது போன்ற பல விவகாரங்களுக்கு சிவில் அல்லது குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றது.

சிவில் சட்டத்தில் அவதூறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழி உள்ளது. அவதூறு மற்றும் பல விவகாரங்களுக்கு குற்றவியல் சட்டவிதியின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வழி உள்ளது. ஆகையால், இக்கால சூழலுக்கு ஏற்ப ஊடகங்களுக்கான சட்டங்கள் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் தனது அமைச்சு செயல்பட்டு வருவதாக கோபின் சிங் டியோ கூறியுள்ளார்.

Tags: Govt Action Act fake news removed

<< RELATED MALAYSIA NEWS>>

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிட டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

<< RELATED MALAYSIA NEWS>>