மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

0
726
failure PAS party Malaysian nation, malaysia tami news, malaysia, malaysia news, pas party,

{ failure PAS party Malaysian nation }

மலேசியா நாடு மிகப் பெரிய கடன் சுமையில் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் 14ஆவது பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று அதன் உதவித் தலைவர் டத்தோ முகம்மட் அமார் நிக் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய கடனை, நாங்கள் அடைக்க முடியாது. எனவே முதலில் மற்றவர்கள் இந்தக் கடனை அடைக்கட்டும். அதன் பின்னர் அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டரசு ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.

கிளாந்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான மேம்பாட்டை தேசிய முன்னணி அரசாங்கம் கொண்டு வந்தது. ஆனால் 1990 ஆம் ஆண்டில் பாஸ் கட்சி மீண்டும் மாநில ஆட்சியைக் கைப்பற்றியது.

அதற்கு முன்பு 1978 ஆம் ஆண்டில் நாங்கள் கிளாந்தானில் தோல்வி கண்டு ஆட்சியை இழந்தோம். ஆனால், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது தேசிய முன்னணியின் ஆட்சியில் எல்லா மேம்பாடுகளும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பின்னர், நாங்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினோம் என்று கிளந்தான் துணைமந்திரி புசாருமான முகம்மட் அமார் நிக் கூறியுள்ளார்.

அதே போன்று 1 டிரில்லியன்ரிங்கிட் நாட்டுக் கடனை, இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் அடைத்த பின்னர், 1எம்டிபி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பின்னர், புத்ராஜெயா ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Tags: failure PAS party Malaysian nation

<< RELATED MALAYSIA NEWS>>

*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது! கேவியஸ் அறிவிப்பு!

*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!

*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!

*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

<< RELATED MALAYSIA NEWS>>