காதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்

0
743
Woman horror love story latest gossip

(Woman horror love story latest gossip )

பொதுவாக காதல் என்றாலே கண்ணை மறைத்து விடும் .காதல் வந்து விட்டால் கவிதை எழுதுவார்கள்,வானில் பறப்பார்கள் ,ஏதோ எண்ணத்தில் திரிவார்கள் .இப்படி பித்து பிடித்தது போல தான் காதலிக்கும் நபருக்காக எதையும் செய்ய துணிவார்கள் .

அதே போலதான் ஆன்லைன் டேட்டிங் மூலம் ஒரு ஆணுடன் தொடர்பு கொண்ட பெண் அந்த ஆணின் மீது கொண்ட அளவில்லா காதால்  செய்த செயலை பார்த்தால் அதிர்ச்சியாகி விடுவீர்கள்

அந்த பெண் பேச தொடங்கிய விரைவிலேயே அந்த ஆண் மீது மிகுந்த ஈர்ப்பும், தனக்கான ஆண் இவர் தான் என்றும் முடிவுக்கு வந்துவிட்டார். இவர்கள் இருவர் மத்தியில் நிறைய ஒற்றுமைகள் இருந்தது அந்த பெண்ணுக்கு ஈர்ப்பை அதிகரித்தது. இருவரின் பிறந்த நாளும் ஒன்று தான். இருவரும் சைவ உணவு பிரியர்கள்.

இப்படியான பல ஒற்றுமைகள் அடுத்தடுத்து அந்த பெண்ணை மிகுந்த ஆர்வத்திற்கு ஆளாக்க. அந்த ஆண் மீது காதல் வயப்பட்டார். மேலும், காதலை தேர்வு செய்வதென்பது எல்லாமே கச்சிதமாக இருக்கிறதா என்பதை வைத்து அல்ல, இது ஒரு பயணம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம், என்று தத்துவமாக கூறியிருக்கிறார் இந்த பெண்மணி.

“உன் இரத்தத்தை வைத்து நான் என்ன செய்வேன்… நான் உன் இரத்தத்தில் குளிக்க விரும்புகிறேன்.” என்று ஒரு செய்தியை அனுப்பியுள்ளார் இந்த பெண்மணி. இப்படியான செய்தியை ரிசீவ் செய்தவுடன்… அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார் அந்த ஆண். இந்த பெண் மிகவும் அபாயமானவள் என்று உணர்ந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார் அந்த ஆண்.

ஆனால், அந்த பெண் தொடர்ந்து செய்திகள் அனுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார். சில நூறு செய்திகள் என்றாலே தலைசுற்றி விடும். அந்த பெண்ணோ… 65000 செய்திகளை அனுப்பி காதலனை திணறடித்துள்ளார்.

ஏன் இத்தனை செய்திகள் அனுப்பினாய் என்று கேள்வி கேட்டதற்கு… நான் அவ்வளவு பெரிதாக ஒன்றும் செய்திகள் அனுப்பவில்லை. நான் அவனை விட்டு பிரியவோ… அவன் என்னை விட்டு பிரியவோ என் மனம் இடம் கொடுக்கவில்லை. அவன் என்னை விட்டு செல்ல கூடாது என்பதற்காக தான் அத்தனை செய்திகள் எனுப்பினேன் என்று கூலாக பதில் அளித்துள்ளார் அந்த பெண்மணி.

காதல் என்பதை காட்டிலும்… அந்த ஆண் மீது பேரார்வம் கொண்டிருக்கிறார் இந்த பெண். அந்த ஆண் தனது வீட்டில் இல்லாத போது.. அவரது வீட்டுக்குள் முரட்டுத்தனமாய் நுழைந்து, அந்த ஆணின் குளியறையில் குளித்துள்ளார் இவர். மேலும், தான் வந்த காரில்… கசாப்பு கடையில் ஆடுகளை வெட்ட பயன்படுத்தும் கத்தியையும் உடன் கொண்டு வந்திருக்கிறார் இந்த பெண். இதனால்… இவரை போலீஸ் கைது செய்தனர்.

நான் மிகவும் அவனை காதலிக்கிறேன். நான் ஒரு அப்பாவி.. எனது காதல் நேர்மையானது… நான் அவனிடம் தான் உண்மையான காதலை உணர்ந்தேன் என்று பரிதாபமாக பேசியிருக்கிறார் அந்த பெண். இப்போது அந்த பெண் கைதாகி விசாரிக்கப்பட்டு வருகிறார். இவர் நிஜமாகவே கொடூரமான குணங்கள் கொண்ட பெண்ணா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று பரிசோதனை செய்து வருகிறார்கள்.

News source by: tamil.boldsky.com

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Woman horror love story latest gossip