மின்சார ராட்டினம் கழன்று விபத்து – சிறுமி பலி!

0
1159
electric car accident Andhra maanilam

electric car accident Andhra maanilam

ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொருட்காட்சியில் இருந்த மின்சார ராட்டினம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அனந்தபூர் மாவட்டத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் பொருட்காட்சிக்கு ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் வருகை புரிந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொருட்காட்சியில் இருந்த மின்சார ராட்டினத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென்று ராட்டினத்தின் ஒரு பெட்டி கழன்று விழுந்தது. இந்த விபத்தில் அம்ருதா என்ற 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் அனந்தப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கோர விபத்தை அடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் ராட்டினத்தின் ஆப்ரேட்டரை கடுமையாக தாக்கினர்.

இதனிடையே இந்த கோர சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், ‘ராட்டினம் சுற்றிக் கொண்டிருக்கும் போதே அதன் போல்ட் கழன்று விழும் நிலையில் இருந்தது. இது குறித்து ஆப்ரேட்டரிடம் கூறினோம். ஆனால் அவர் மதுபோதையில் இருந்ததால் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.’ என்றனர். பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் ஆப்ரேட்டரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

More Tamil News

Tamil News Group websites :