ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வாள் காணிக்கை!

0
549
temple Rs. 2.5 crores gold worth gold bodi

temple Rs. 2.5 crores gold worth gold bodi

தேனி மாவட்டம் போடி திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்லத்துறை, கடந்த 6 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இதுவரை தங்க ஒட்டியாணம், தங்க பாதம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

தற்போது இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் 5 கிலோ எடை கொண்ட தங்கம், ஒன்றறை கிலோ எடை கொண்ட வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட சூரிய கிடாரி எனும் வாளை காணிக்கையாக வழங்க திட்டமிட்டிருந்தார்.

இரண்டு நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்பு, தொழிலதிபர் செல்லத்துரை, அதனை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.

இவற்றைப் பெற்றுச் செல்ல போடிக்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதனைக் கொண்டு சென்றனர்.

More Tamil News

Tamil News Group websites :