கிண்ணம் சென்னைக்கா? ஹைதராபாத்திற்கா? : இன்று மும்பையில் ஐ.பி.எல். மோதல்!!!

0
859
sunrisers hyderabad vs Chennai super kings IPL 2018 Final

(sunrisers hyderabad vs Chennai super kings IPL 2018 Final)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரண்டு வருட தடைக்கு பின்னர் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பலமான அணியாக வெளிவந்துள்ளது.

இந்த சீசனுடன் ஆறுவது இறுதிப்போட்டியில் கால் பதிக்கும் சென்னை அணி, தங்களது மூன்றாவது கிண்ணத்தை குறிவைத்து களமிறங்கவுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் சம்பியன் கிண்ணத்தை சென்னை அணி 2 தடவை கைப்பற்றியுள்ளதுடன், ஹைதராபத் அணி ஒரு தடவை சுவீகரித்துள்ளது.

இந்த சீசனில் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், சென்னை அணி ஆதிக்கத்தை செலுத்திகின்றது.

இம்முறை மூன்று போட்டிகளில் ஹைதராபத் அணியை எதிர்காண்ட சென்னை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்துள்ளது.

தோல்வியடைந்து அழுத்தத்திற்குள்ளாகியுள்ள ஹைதராபாத் அணி இன்று சென்னையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இரண்டு அணிகளையும் பொருத்தவரையில் சென்னை அணிக்கு தங்களது துடுப்பாட்ட வரிசையின் பலமும், ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு பலமும் அதிகமாகவுள்ளது.

எனினும் இறுதியாக இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை அணியின் துடுப்பாட்ட வரிசையை ஹைதராபத் அணி தினறிடித்திருந்தது. எவ்வாறாயினும் தாகூர் மற்றும் டுபிளசிஸ் சென்னை அணியின் வெற்றியை இறுதியில் உறுதிசெய்தனர்.

இதனால் இன்று சென்னை அணி சற்று நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் அணிக்கு துடுப்பாட்ட வரிசை சவாலாக உள்ளது. தவான் மற்றும் வில்லியம்ஸன் மாத்திரம் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, மத்தியவரிசையில் பிராத்வைட் மற்றும் சகிப் அல் ஹசன் சிறிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
ஏனைய வீரர்களின் துடுப்பாட்டம் முறையாக வெளிப்படாமை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது.

எவ்வாறாயினும் இன்று இறுதிப்போட்டி, வேறு வாய்ப்புகள் இல்லை. போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே கிண்ணம் என்ற ரீதியில், அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயற்பட வேண்டும். அப்படி இருந்தால் மாத்திரமே அணியாக வெற்றிக்கொள்ள முடியும்.

கிண்ணம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வந்த சென்னை அணிக்கா? அல்லது வில்லியம்ஸன் தலைமையிலான ஹைதராபத் அணிக்கா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

<<Tamil News Group websites>>

sunrisers hyderabad vs Chennai super kings IPL 2018 Final