​ஸ்மார்ட் சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி!

0
851
pm modi dedicates smart road country

pm modi dedicates smart road country

டெல்லி – மீரட், ஸ்மார்ட் விரைவு வழிச்சாலையின் முதற்கட்ட பணிகள் சுமார் ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகின்றன. மேலும் நாட்டின் முதல் ஸ்மார்ட் விரைவு வழிச்சாலையில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த சாலையில் இடம் பெற்றுள்ளன. இந்த சாலை சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து விடுதலை பெறுவதற்கான சாலை என்று பிரதமர் மோடியால் வர்ணிக்கப்படும், இந்த ஸ்மார்ட் விரைவுச் சாலையில், சைக்கிள் ஒட்டுபவர்களுக்கென தனியாக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விரைவு வழிச்சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர், அதனைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்தார். சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களைப் பார்த்து கை அசைத்தவாறே பிரதமர் பயணம் மேற்கொண்டார்.

தேசிய நெடுஞ்சாலை எண் 24ல், சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமை வழி விரைவுச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 58ல் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 பாகங்களாக இந்த ஸ்மார்ட் விரைவு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விரைவு வழிச்சாலை டெல்லியின் நிஜாமுதீன் பாலத்தில் இருந்து உ.பி. எல்லை வரையிலும், அங்கிருந்து Dasna பகுதி வரையிலும், பின்னர் hapur பகுதி வரையிலும், இறுதியாக மீரட் நகருடன் இணைக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :