​கடன் பெற்றவரின் மனைவியை தாக்கிய கொடூரம்!

0
801
cruelty local finance borrower's wife thirupur

cruelty local finance borrower’s wife thirupur

திருப்பூர் பெருந்தொழவு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், பல்லடத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் தனது வீடு மற்றும் நிலத்தை அடமானமாக வைத்து கடந்த 2008ம் ஆண்டு 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடனைத் திருப்பி அளிக்காததால், அவரது வீட்டை 2012ம் ஆண்டு கணேசன், தனது பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். இதனை அறிந்த நடராஜன், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் கணேசனின் ஆட்கள் சிலர் நடராஜனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த நடராஜனின் மனைவி ஜெயந்தியையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஜெயந்தி, திருப்புர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :