பெண்களை மிரட்டி நகைகளை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள்!

0
2491
college students robbed women black magic

college students robbed women black magic

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டருக்கு கடந்த 21ம் தேதி வந்த 4 இளைஞர்கள் அங்கிருந்த பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததுடன், அவர்கள் அணிந்திருந்த 10 சவரன் நகைகள் மற்றும் கொலுசுகளை பறித்து சென்றனர்.

இது குறித்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் சுஜி கொடுத்த புகாரின் பேரில் எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் விசாரணை செய்தனர். மசாஜ் சென்டர் இருக்கும் வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு எர்ணாவூர் குப்புராஜ், பிரதாப், ராயபுரத்தை சேர்ந்த அஜய், ஷாயின்ஷா ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் குப்புராஜ், ஷாயின்ஷா இருவரும் சட்டக்ககல்லூரி் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :