வெளுத்து விளாசிய வொட்சன்!!! : மூன்றாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றது சென்னை!!!

0
582

(chennai super kings vs sunrisers hyderabad IPL 2018 final)

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீீீீகரித்துள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கோவ்சாமி 5 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க, வில்லியம்ஸன் மற்றும் தவான் நிதானமாக துடுப்பெடுத்தாடினர்.

தவான் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, வில்லியம்ஸன் அதிரடியாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அணியின் சகிப் அல் ஹசன் 23 ஓட்டங்களையும், யூசுப் பதான் 25 பந்துகளுக்கு 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இறுதியாக களம் நுழைந்த பிராத்வைட்டும் தனது பங்குக்கு 11 பந்துகளுக்கு 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஹைதராபாத் அணி 178 ஓட்டங்களை குவித்தது.

சென்னை அணி சார்பில் லுங்கி என்கிடி 4 ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

புவனேஷ்வர் குமார் முதலாவது ஓவரை ஓட்டங்கள் இன்றி வீச, சென்னை அணி அழுத்தத்தை எதிர்கொண்டது. அடுத்த ஓவர்களும் சிறப்பாக வீசப்பட்ட, சந்தீப் சர்மா வீசிய நான்காவது ஓவரில் டு பிளசிஸ் 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த ரெய்னா மற்றும் வொட்சன் அதிரடியாக ஓட்டங்களை குவித்தனர்.

ரெய்னா 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் ஆடிய வொட்சன் சதமடித்து வெற்றியை உறுதி செய்தார். இவர் 57 பந்துகளுக்கு 117 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் வொட்சன் அடித்த இரண்டாவது சதமாகவும் இன்றைய சதம் பதிவாகியுள்ளது.

இதேவேளை சென்னை அணி 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை 18.3 ஓவர்களில் அடைந்தது.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணி சார்பில் பிராத்வைட் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

<<Tamil News Group websites>>

sunrisers hyderabad vs Chennai superchennai super kings vs sunrisers hyderabad IPL 2018 final, chennai super kings vs sunrisers hyderabad IPL 2018 final