audio recorded Apollo Hospital Jayalalithaa suffered stroke
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது அப்பலோ வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட ஓடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பேசியதாக ஓடியோ வெளியானது தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பவே குறித்த ஓடியோ பதிவு வெளியிடப்பட்டது என அரசியல் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அப்பலோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 27ஆம் திகதியன்று இந்த ஓடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 52 விநாடிகள் ஓடும் இந்த ஓடியோவில் தனக்கு மூச்சுத் திணறல் உள்ளதை ஜெயலலிதா மருத்துவரிடம் விவரிக்கிறார்.
ஓடியோவில் ஜெயலலிதா, திரையரங்கின் முன் இருக்கையிலுள்ள ரசிகன் படம் பார்க்கும் போது விசிலடிக்கும் சத்தம் போல தனக்கு மூச்சுத்திணறல் கேட்பதாக கூறுகிறார்.
மேலும், இரத்த அழுத்தம் எவ்வளவு என மருத்துவரிடம் ஜெயலலிதா கேட்கிறார். அவருக்கு வைத்தியம் பார்க்கும் பெண் மருத்துவர் இரத்த அழுத்தம் 140 / 80 என்று கூறுகிறார். அதற்கு ஜெயலலிதா ”எனக்கு அது நார்மல் தான்” என்கிறார்.
தொடர்ந்து, வைத்தியசாலையில் நடைபெற்ற உரையாடலை பதிவு செய்பவரிடம் ஜெயலலிதா கடிந்து கொண்டு பேசுவதும் ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள ஓடியோவில் இடம்பெற்றுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பான தகவல்கள் எதற்கு ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டது யார், எத்தனை பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர், இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தவிர தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
ஜனநாயக இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் என இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா இறப்பதற்கு 68 நாட்களுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட ஓடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது, தமிழகத்தின் எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலைகளை திசை திருப்பும் முயற்சி என பல அரசியல் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
audio recorded Apollo Hospital Jayalalithaa suffered stroke
More Tamil News
- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி!
- மாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை!
- முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்!
- ஜவஹர்லால் நேருவின் 54வது நினைவு தினம் இன்று!
- பெண்களை மிரட்டி நகைகளை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள்!
- அமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உடன் சிக்கல் – குமாரசாமி!
- ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வாள் காணிக்கை!
- கடன் பெற்றவரின் மனைவியை தாக்கிய கொடூரம்!
- ஸ்வீட் கடைக்காரரை அடித்துக் கொலை செய்த நபர்!
Tamil News Group websites :