160,000 பேர் இருப்பிடமின்றி, 23 பேரை காவு கொண்டு கோர தாண்டவமாடும் இயற்கை

0
466
South west monsoon gradually establishing Bay Bengal however

(South west monsoon gradually establishing Bay Bengal however)

அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலானவர்கள் இருப்பிடமின்றி தவிப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி பதிவிடப்படும் தருணம் வரை 23 பேர் வரை இயற்கையின் கோர தாண்டவத்திற்கு பலியாகியிருந்தனர்.

20 மாவட்டங்களுக்கு தாக்கம் செலுத்தும் அசாதாரண காலநிலையால் நீரேந்து பிரதேசங்களின் வெள்ள அபாய நிலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக களு கங்கை, அத்தனகல்ல ஓய ஆகியவற்றில் வெள்ள அபாயநிலை ஏற்பட்டிருந்த போதும் தற்போது நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.

இருப்பினும் அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களும் இயல்பான மட்டத்தில் உள்ளன.

வெள்ள அச்சுறுத்தலைக் குறைப்பதற்கு சில இடங்களில் இருந்து வரும் நீரை வெளியேற்றுவதற்காக சில நீர்த்தேக்க அவசர வாயில்கள் திறக்கப்படுகின்றன.

மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்னமும் இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா ஆகிய இடங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை படிப்படியாக வங்காள விரிகுடாவில் மையம் கொள்ள தயாராகின்றது.

ஆனால் இந்திய கடலோரப்பகுதியின் தென்மேற்கு அருகே காற்று சுழற்சி உள்ளது, காற்றின் வேகம் நேரத்துக்கு நேரம் அதிகரிக்கலாம என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

(South west monsoon gradually establishing Bay Bengal however)

More Tamil News

Tamil News Group websites :