மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

0
885
woman attempt halt Malaysia debt, malaysia tami news, malaysia, malaysia news, Malaysia debt,

{ woman attempt halt Malaysia debt }

மலேசியா: நாட்டின் கூட்டரசு அரசாங்கம் கொண்டிருக்கும் கடனைக் குறைக்க உதவும் வகையில் மக்களிடையே நிதி திரட்டும் இயக்கம் ஒன்றை இளம் மலேசியர் ஒருவர் தொடங்கி இருக்கின்றார். தம்முடைய இந்த முயற்சிக்கான உந்துதுதலாக இருந்த வரலாற்று நிகழ்வு ஒன்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெர்டேக்கா பேச்சுவார்த்தைக்காக லண்டன் புறப்பட்ட துங்கு அப்துல் ரஹ்மானுக்கு அன்றைக்கு மக்கள் நிதிதிரட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தனர் என்ற வரலாற்றை 27 வயதுடைய சட்டத்துறை மாணவியான நிக் ஷாஸாரினா நினைவு கூர்ந்துள்ளார்.

இப்போது நாம் அதே பாணியில் செய்வோம். ‘நெகாராக்கூ மலேசியா’வைக் காக்க நாங்களும் சேவை செய்தோம் என்பதை வருங்காலத்தில் நமது பிள்ளைகளிடம், நமது பேரப்பிள்ளைகளிடம் பெருமையாகச் சொல்வோம் என்று ஷாஸாரினா கூறியுள்ளார்.

‘சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம்’ என்ற அமைப்பில் சட்ட அதிகாரியாக இருந்து வரும் ஷாஸாரினாவின் இந்த நிதி இயக்கம், தற்போது 3,633 அமெரிக்க டாலரைத் திரட்டி இருக்கின்றது. இதுவரை 92 தனிநபர்கள் இதற்கு நிதி அளித்துள்ளனர்.

ஜூலை 31ஆம் திகதியோடு முடிவுக்கு வரும் இந்த இயக்கம், அடுத்த 67 நாட்களுக்குள் ஒரு லட்சம் டாலரைத் திரட்ட எண்ணம் கொண்டுள்ளது என்று ஷாஸாரினா கூறியுள்ளார்.

இதனிடையே இந்த இயக்கத்தின் நோக்கத்தைப் பாராட்டிய சமூகவியல்வாதியான மரினா மகாதீர், மக்களும் இந்த இயக்கத்திற்கு தங்களால் இயன்றதை அளித்து உதவலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: woman attempt halt Malaysia debt

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது! கேவியஸ் அறிவிப்பு!

*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!

*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!

*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

<< RELATED MALAYSIA NEWS>>