Vilupuram district police arrested Velmurugan case Sungavakari
தமிழகத்தின் உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவுனத் தலைவர் வேல்முருகனை விழுப்புரம் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளதையடுத்து, ”இந்திய மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாலேயே இந்த கைது” என அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெள்ளிக்கிழமை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளத்திலுள்ள விமான நிலையத்துக்கு சென்றார் அப்போது விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை, “உள்ளே அனுமதித்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது” எனக் கூறி பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதை மீறி செல்ல முயன்றதையடுத்து, வேல்முருகன் உள்ளிட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்து, புதுக்கோட்டை- சாயர்புரம் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வேல்முருகனை விழுப்புரம் மாவட்ட பொலிஸார் கைது செய்து திருக்கோவிலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வேல்முருகனை சென்னை புழல் சிறையில் 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம வேல்முருகன் கூறியதாவது,
‘பிரதமர் மோடி தமிழக வருகையைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் போராட்டத்தைக் கண்டித்தும் போராடியதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த கைது நடவடிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.
புழல் சிறைக்கு வேல்முருகனை பொலிஸார் கொண்டு செல்லும் வழியான மடப்பட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vilupuram district police arrested Velmurugan case Sungavakari
More Tamil News
- அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!
- சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு!
- பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு!
- அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்!
- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம்!
Tamil News Group websites :