அனர்த்த பாதிப்புகளுக்கு சில வாரங்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் – வஜிர அபேவர்த்தன

0
418
Vajira Abeywardhan extraordinary climate affected people fund

(Vajira Abeywardhan extraordinary climate affected people fund)

அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிவாரணங்களை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் முழுவளவில் தயார் நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாதிப்புக்கள் குறைவாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காலி மாவட்டத்திற்கு 80 கோடி ரூபாவும் களுத்துறை மாவட்டத்திற்கு 100 கோடி ரூபாவும் மாத்தறை மாவட்டத்திற்கு 150 கோடி ரூபாவும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு 200 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அனர்த்த நிலைமைகள் பற்றி பொதுமக்கள் அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவிக்க முடியும். இதற்காக அழைக்க வேண்டிய நிலையம். 1902 என்பதாகும்.

தமது வீட்டிற்கோ சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் கிராம உத்தியோகத்தருக்கு பிரதேசத்தைச் சேர்ந்தகள உத்தியோகத்தர்களுக்கோ அறியத் தரலாம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆலோசனை வழங்கினார்.

(Vajira Abeywardhan extraordinary climate affected people fund)

More Tamil News

Tamil News Group websites :