ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவுக்கு நான் கட்டுப்பணம் செலுத்துவேன் – சரத் பொன்சேகா

0
810
mnister field marshal sarath fonseka criticize present government

(tamilnews next president election gottabaya rajapaksa sarath fonseka)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவாராயின், தேர்தலுக்காக அவர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தை அவர் சார்பில் தான் செலுத்த தயார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் வைத்து செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா, முன்னாள் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ இருந்த போது பலர் அஞ்சினார்கள்.

வௌ்ளை வேனை அனுப்பி கடத்தினார், குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்தினார். தனியாரின் சொத்துகளை கொள்ளையடித்தார், இதனால் மக்கள் மிக பயந்தார்கள்.

ஆனால் தான் எந்த சந்தர்ப்பத்திலும் ராஜபக்‌ஷ குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் அஞ்சி நடுக்கியது இல்லை எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

எனவே, அவர்களில் யார் தேர்தலில் மேடை ஏறினாலும் அதனை சவாலாக ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(tamilnews next president election gottabaya rajapaksa sarath fonseka)

More Tamil News

Tamil News Group websites :