பசு வதையை எதிர்த்து இந்து – பௌத்த மத தலைவர்களின் அடையாள உண்ணாவிரதம்

0
451
tamilnews hindu buddhist monks protest cow cutting stop warning

(tamilnews hindu buddhist monks protest cow cutting stop warning)
பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து – பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது.

‘பசுவதையை ஒழிப்போம் பசுவை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ் தென்மராட்சி பிரதேச இந்து மக்கள் ஏற்பாடு செய்த இந்த அடையாள உண்ணாவிரதம் இன்று சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது

யாழ் மாவட்டத்தில் குறிப்பாக சாவகச்சேரி பிரதேச செயலக பிரிக்குட்பட்ட பகுதிகளில் பசுவதை இடம்பெறுவதாகவும், அதனை உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது

அத்துடன் இப்பகுதியிலுள்ள மாட்டிறைச்சி விற்பனை நிலையத்தில் மக்களின் தேவைக்கதிகமாக மாடுகள் அறுக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதையும் தடுத்து நிறுத்துமாறு போராட்டக்கார்ர்கள் வலியுறுத்தினர்.

குறித்த மாட்டிறைச்சிக் கடையை அகற்றவேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கைவிடுத்தனர்

இன்று காலை ஆறு மணி தொடக்கம் மாலைவரை இடம்பெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் யாழ் நாகவிகாரை விகாராதிபதி மீகஹகந்துரே விமலதேரர், நல்லை ஆதீன குரு முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர தேசிக பரமாச்சாரியார் மற்றும் யாழ் சின்மயா மிஷன் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் உண்ணாவிரத்த்தில் கலந்துகொண்டு பசுவதைக்கெதிராக தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.

(tamilnews hindu buddhist monks protest cow cutting stop warning)

More Tamil News

Tamil News Group websites :