மூவரை காப்பாற்ற சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் பணிகள் தொடர்கின்றன

0
510
missing police men searching public navy Tamil latest news

நீரில் மூழ்கி காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. missing police men searching public navy Tamil latest news

மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வெளளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் குறித்த உத்தியோகத்தர் காணாமல் போயுள்ளார்.

29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

திருமணமாகாத அவர் கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (25) மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முருவ பிரதேசத்தில் வெளளத்தில் சிக்கியிருந்த குடும்பமொன்றை காப்பாற்ற நீரில் நீந்திச் சென்று கொண்டிருக்கும் போது குறித்த பொலிஸ் காண்ஸ்டபிள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.

நேற்று காணாமல் போனது முதல் அவரை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் தரைப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர பிரதேசவாசிகளும் குழுக்களாக இணைந்து காணாமல் போயுள்ள பொலிஸ் காண்ஸ்டபிளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
missing police men searching public navy Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :