ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

0
907
Jamal Younas undercover Police bridging, malaysia tami news, malaysia, malaysia news, Jamal Younas,

{ Jamal Younas undercover Police bridging }

மலேசியா: கே.பி.ஜே. அம்பாங் புத்ரி நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அம்னோ சுங்கை பெசார் தொகுதியின் தலைவர் ஜமால் யூனோஸ் நேற்று மாலை 5.00 மணி அளவில் தலைமறைவாகியுள்ளார்.

நீதிமன்றத்தின் துணைபதிவதிகாரி நீதிமன்ற நடைமுறையின் காரணமாக அந்த மருத்துவமனைக்கு வந்த போது ஜமால் யூனோஸ் அங்கு இல்லை என்பதை கண்டறிந்துள்ளார்.

தற்போது, அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்கான முயற்சியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

இது குறித்து, சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வுத் துறையின் தலைவர் பாட்சில் அஹ்மாட் கூறுகையில், சிவப்பு சட்டை இயக்கதின் தலைவரான ஜமால் யூனோஸை அவரது ஜாமின் தொடர்பில் சந்திப்பதற்கு நீதிமன்ற துணைப்பதிவதிகாரி வந்திருந்த போது, அவர் காணாமல் போயுள்ளது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்தும் வகையில் அவரை தேடி கண்டு பிடிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.

அவரை பலமுறை தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவரது வாட்சாப்பும் கடந்த மே 10ஆம் திகதியிலிருந்து செயல்படாமல் உள்ளது.

முதுகு வலி காரணமாக ஜமால் யூனோஸ் கே.பி.ஜே. அம்பாங் புத்ரி நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

குற்றவியல் சட்டவிதி செக்‌ஷன் 290 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 48 வயதுடைய ஜமால் யூனோஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 400 வெள்ளி அபராதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றம் ஒருவரின் உத்தரவாதத்துடன் ஜமாலுக்கு 3 ஆயிரம் வெள்ளி ஜாமினை வழங்க அனுமதித்ததோடு இவ்வழக்கின் விசாரணையை ஜூன் 8ஆம் திகதி ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 5ஆம் திகதி சிலாங்கூர் அரசு தலைமையத்திற்கு முன்பு ஜமால் யூனோஸ் பீர் விழாவை எதிர்த்து போராட்டம் செய்ததோடு சுத்தியலைக் கொண்டு பீர் பெட்டிகளை உடைத்துள்ளார்.

மேலும், அவர் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டும் புகைப்படங்கள் வைரலானது தொடர்பில் 1960ஆம் ஆண்டு ஆயுத சட்டத்தின் கீழ் கடந்த செவ்வாய்கிழமை அதே மருத்துவமனையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Tags: Jamal Younas undercover Police bridging

<< RELATED MALAYSIA NEWS>>

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது! கேவியஸ் அறிவிப்பு!

*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!

*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!

*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

<< RELATED MALAYSIA NEWS>>