இரண்டே வாரங்களில் கட்டுபடுத்தி காட்டுவேன்

0
609
influenza virus can control two weeks southern health director

இன்புளுவன்சா வைரசினை முற்றாக கட்டுபடுத்த முடியும் என தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.  influenza virus can control two weeks southern health director

இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.

இனம் காணப்படாத வைரஸ் தொற்று காரணமாக தென் மாகாணத்தில் அண்மைய நாட்களில் 07 சிறுவர்கள் உயிரிழந்திருந்த நிலையில், அது இன்புளுவன்ஸா வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

02 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், சுவாச பிரச்சினையை எதிர்கொள்ளும் நபர்கள் மற்றும் வயது வந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
influenza virus can control two weeks southern health director

More Tamil News

Tamil News Group websites :