விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தற்கொலை

0
628
Liberation Tigers Tamil Eelam former member suicide

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெகிவத்த பிரதேசம் கங்குவேலி கிராமத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். Liberation Tigers Tamil Eelam former member suicide

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்டவர் 36 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அவர் இவ்வாறு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் முடித்தவர் என்றும் மூதூர் இரால் குழியை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடித்த பின்னர் தெகிவத்த பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Liberation Tigers Tamil Eelam former member suicide

More Tamil News

Tamil News Group websites :