government ready respond question complaints people whistling shooting incident
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மக்கள் விசில் செயலியில் குவிந்திருக்கும் முறைப்பாட்டு கேள்விகளுக்கு அரசு பதிலளிகத் தயாரா என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
அதில் மக்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவித்தால் அதற்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களாக தூத்துக்குடியில் நடந்து வந்த கலவரம் மற்றும் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் குறித்து மய்யம் விசில் செயலிக்கு அதிக முறைப்பாடுகள், கேள்விகள் வந்துள்ளதாகவும் அதற்கு அரசு பதிலளிக்க முடியுமா என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘தூத்துக்குடியில் பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் அரசாங்கம் மற்றும் பொலிஸாரின் திறமையின்மையா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையவோ, அங்கிருக்கும் பொருள்களை சேதப்படுத்தவோ, முயலவில்லை என்றே நமக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களும் உறுதி செய்கின்றன.
மேலும், மய்யம் விசில் செயலியில் வந்திருக்கும் முறைப்பாடுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளவை யார் இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது? துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்ன? துப்பாக்கிச்சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் குண்டுகளின் விவரங்கள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை? இதுபோன்று பல சந்தேகங்கள் நிறைந்த கேள்விகளை முன் வைத்து அதற்கு அரசு பதிலளிக்க முடியுமா என கமல்ஹாசன் கேட்டுள்ளார்.
government ready respond question complaints people whistling shooting incident
More Tamil News
- அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!
- சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு!
- பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு!
- அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்!
- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம்!
Tamil News Group websites :