28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

0
275

(28,000 worth  drug confiscation)

சிங்கப்பூரில் , மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு 28,000 வெள்ளிக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது.

சந்தேக நபர்களில் ஒருவரான 36 வயதுப் பெண், ஜூரோங் கேட்வே ரோட்டில் கைதுசெய்யபட்டவர்களாவர், அவரின் வாகனத்திலிருந்து 935 கிராம் கஞ்சா, 118 கிராம் ஐஸ் போதைப்பொருள், 8 கிராம் கெட்டமைன் போதைப்பொருள், 1000 எரிமின்-5 (Erimin-5) மாத்திரைகள், 125 எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் , அந்தப் பெண்ணுடன் காணப்பட்ட 30 வயது மலேசிய நபரிடமிருந்து 2,150 வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 35 வயது சிங்கப்பூர்ப் பெண் பிடோக் நார்த் ஸ்திரீட் 1-இல் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து சிறு அளவிலான கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.

மற்றும் , இந்த சம்பவம் தொடர்பில் 42 வயது சிங்கப்பூர் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார், அதோடு , சந்தேக நபர்களின் நடவடிக்கைகள் மீது விசாரணை தொடர்கிறது.

tags:-28,000 worth  drug confiscation

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**