Canada Mississauga Blast
மிசிசாகுவா குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை தேடி கனேடிய பொலிஸார் தீவிர தேடல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
மிசிசாகுவா பகுதியில் அமைந்துள்ள பொம்பே பேல் என்ற இந்திய உணவு விடுதியிலேயே குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது
இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இரு மர்ம நபர்கள் உணவு விடுதிக்குள் வந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த இருவரையும் அடையாளம் காண உதவும் படி பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதில் தீவிரவாத தாக்குதலுக்குரிய எவ்வித அடையாளமும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களை அடையாளம் காண உதவும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.