சாதனை விளக்க கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்!

0
853
BJP plans hold record gathering meetings

BJP plans hold record gathering meetings

பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, நாளை 27-ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பாஜக தலைமை, பாஜகவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஆகியோர், சமூக பிரபலங்கள் ஒருலட்சம் பேரிடம், பாஜக அரசின் சாதனைகளை விளக்கிக் கூற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு பாஜக பிரதிநிதியும் தலா 25 பிரபலங்களிடம் மோடி அரசின் சாதனைகளை கூற, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரிடம் பாஜக அரசின் சாதனைகளைத் எடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதைத் தவிர, கிராமப்புற அளவில் சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :