தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.

0
1702

(Sterlite Factory History Protest Thoothukkudi Shoot)
தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிதடி, கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூடு என தூத்துக்குடியில் பெரியளவில் கலவரமே வெடித்திருந்தது.

இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில், தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் தாரைவார்த்து கொடுத்ததன் விளைவே இவ்வாறான நிலமைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இந்தப் போராட்டத்துக்கான காரணம்
உரிமையாளர் – அனில் அகர்வால்
தலைமையிடம் – இலண்டன்,இங்கிலாந்து
நிறுவனப் பெயர் – வேதாந்தா ரிசோர்ஸ்
அமைத்துள்ள இடம் – தூத்துக்குடி
முக்கிய உற்பத்தி – தாமிரம் (copper )
கழிவு உற்பத்தி – தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்
முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்
அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத்,மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா
அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் – மகாராஷ்டிரா , ரத்னகிரி
அப்போதைய மகராஷ்ர முதல்வர் – சரத்பவார்
அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு
அடிக்கள் நாட்டியவர் – முதல்வர் ஜெ.ஜெயலலிதா 1994
ஆலை இயங்க அனுமதியளித்தவர் – முதல்வர் மு.கருனாநிதி 1996
அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்
முதல் உண்ணாவிரத போராட்டம் -1996
போராட்டம் நீர்த்த காரணம் – தென் மாவட்ட சாதிசண்டை
தண்ணீர் எடுக்கப்படும் ஆறு – தாமிரபரணி
ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7
முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)
இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)
மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)
நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)
ஐந்தாம் விபத்து – ஆயில் டேங்க் வெடிப்பு
ஆறாம் விபத்து – நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்
உற்பத்தி செய்தது – 2லட்சம் டன் (2005 கணக்கில்)
ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28
ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா
மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து -உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு பசுமை வாரிம் – தடை
தேசிய பசுமை வாரியம் – அனுமதி
Tag: Sterlite Factory History Protest Thoothukkudi Shoot