இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் : அறிவிக்கப்பட்டது மே.தீவுகள் அணிக்குழாம்!

0
720
west indies squad vs Sri lanka 2018

(west indies squad vs Sri lanka 2018)

இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான மே.தீவுகள் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அடுத்த மாதம் 6ம் திகதி மே.தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டித் தொடருக்கான இலங்கை அணிக்குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே.தீவுகள் அணியின் 13 பேர்கொண்ட அணி விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அணிக்குழாமில், சுமார் 3 வருடங்களுக்கு பின்னர் டெவன் ஸ்மித் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக 2015ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கதெிரான தொடரில் விளையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து தேசிய அணியில் விளையாடாத இவர், உள்ளூர் போட்டிகளில் மாத்திரம் விளையாடி வந்தார்.

மே.தீவுகளில் நடைபெற்ற நான்கு நாள் போட்டிகளில் விளையாடிய ஸ்மித், 84.23 என்ற சராசரியில் 6 சதங்கள் அடங்கலாக 1095 ஓட்டங்களை குவித்திருந்தார். இவர் 10 போட்டிகளில் 6 சதங்கள் அடித்துள்ளார். இவரின் சிறந்த துடுப்பாட்டத்தை கவனத்தில் கொண்டு, மே.தீவுகள் கிரிக்கெட் சபை இவரை மீண்டும் அணியில் இணைத்துள்ளது.

இவருடன் அறிமுக வீரர் ஜெஹமர் ஹெமில்டனையும் (விக்கட்காப்பாளர்) மே.தீவுகள் அணிக்குழாமலில் இணைத்துள்ளது.

இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய, சுனில் எம்ரிஸ்,  ஜெர்மைன் பிளக்வூட், அல்ஷாரி ஜோசப் மற்றும் ரெய்மோன் ரெய்பர் ஆகியோர் இம்முறை நீக்கப்பட்டுள்ளனர்.

மே.தீவுகள் அணி விபரம்

ஜேசன் ஹோல்டர் (தலைவர்), டிவேந்தர பிஷு, கிரைக் பிராத்வைட், ரொஸ்டர் சேஷ், மிகுல் கம்மின்ஸ், ஷேன் டொவ்ரிச், செனோன் கேப்ரியல், ஜெஹமர் ஹெமில்டன், ஷிம்ரோன் ஹெட்மைர், ஷாய் ஹோப், கீரன் பவெல், கீமார் ரோச், டெவன் ஸ்மித்

west indies squad vs Sri lanka 2018

<<Tamil News Group websites>>