நேற்றைய போட்டியில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள்! : எதற்காக?

0
880
Pakistan wore apple smart watch news Tamil

(Pakistan wore apple smart watch news Tamil)

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களான பாபர் அஷாம் மற்றும் அஷாட் சபீக் ஆகியோர் ஆப்பில் ஸ்மார்ட் கடிகாரங்களை (apple smart watch) அணிந்து சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் போட்டியின் போது வீரர்கள் ஸ்மார்ட் கடிகாரங்களை அணிவதற்கு தடை விதித்துள்ளது. ஸ்மார்ட் கடிகாரங்களில் இணைய வசதி உள்ளதால், வீரர்கள் நேரடியாக சூதாட்ட தரகர்களுடன் தொடர்புக்கொள்ள முடியும் என்ற காரணத்தினால் ஸ்மார்ட் கடிகாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டள்ளது.

எனினும் இந்த தடையை மீறி குறித்த இரண்டு வீரர்களும் ஸ்மார்ட் கடிகாரங்களுடன் விளையாடியுள்ளனர்.

அதுமாத்திரமின்றி குறித்த இரண்டு வீரர்களும் ஆப்பில் நிறுவனம் தயார் செய்யும், ஒரே வகையான சீரிஸ் அடங்கிய கடிகாரங்களை அணிந்திருந்துள்ளனர்.

இந்நிலையில் ஐசிசி அதிகாரிகள் பாகிஸ்தான் வீரர்களை சந்தித்து பேசியதாகவும், இனிவரும் போட்டிகளில் ஸ்மார்ட் கடிகாரங்களை அணியமாட்டோம் எனவும் பாகிஸ்தான் அணியின் அஷார் அலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கான தண்டனைகள் வழங்கப்படுமா? என்பதை ஐசிசி இதுவரையில் அறிவிக்கவில்லை.

இதேவேளை டேவிட் வோர்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய போது கை விரல்களில் “டேப்” சுற்றியிருந்ததை போன்று, இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்களும் “டேப்” சுற்றியிருந்தனர். எவ்வாறாயினும் பந்தை சேதப்படுத்தியதற்கான எந்தவித சந்தேகத்துக்கிடமான மாற்றங்களும் பந்தில் இல்லையென போட்டி மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

<<Tamil News Group websites>>