முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : முன்னாள் போராளி ஜெயக்குமாருக்கு அழைப்பாணை

0
703
mullivaikkal remembrance day former ltte member inquiry

(mullivaikkal remembrance day former ltte member inquiry)
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.

கே. ஜெயக்குமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் போராளியையே, கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு, புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட இந்த முன்னாள் போராளி, போரில் ஒரு காலை இழந்தவர். தற்போது, கிளிநொச்சி சந்தையில், காய்கறிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவராகவும், தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராகவும் உள்ள இவர், கடந்த 18ஆம் நாள் கிளிநொச்சியில் நடந்த நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :