அவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு!

0
665
Malaysia Drugs Smuggling Case Australia Mother Death Penalty

(Malaysia Drugs Smuggling Case Australia Mother Death Penalty)

அவுஸ்திரேலியாவை சேர்ந்த மரியா எக்ஸ்போஸ்டோ என்னும் 54 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் போதைவஸ்து கடத்தல் தொடர்பில் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைதாகும் போது அவரின் பையில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்தது.

ஆனால் அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். அந்த பையில் போதைப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது எனவும், அதை தனது ஆன்லைன் நண்பர் ஒருவர் தன்னிடம் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு நபரிடம் கொடுக்குமாறு வேண்டிக்கொண்டதை அடுத்து அந்த பையை எடுத்து வந்ததாகவும், மரியா கூறினார்.

Malaysia Drugs Smuggling Case Australia Mother Death Penalty
Photo Source : irishtimes.com

இந்நிலையில், போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரியாவுக்கு மரண தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவிட்டார்.

அவுஸ்திரேலிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது தொடர்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக மரியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்