பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது! கேவியஸ் அறிவிப்பு!

0
712
join Mubibi Party Pakatan Kevin, malaysia tami news, malaysia, malaysia news, keviyas,

{ join Mubibi Party Pakatan Kevin }

மலேசியா: தேசிய முன்னணியை விட்டு விலகிய பின்னர் பக்காத்தான் ஹராப்பானில் சேரும் எண்ணம் மைபிபிபி கட்சிக்கு இல்லை என அதன் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற விஸ்மா மைபிபிபியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மைபிபிபி பக்காத்தான் ஹராப்பானில் சேர திட்டம் இல்லை. தற்போதைக்கு நாங்கள் உட் கட்சி தலைமையை சரி செய்வதில் கவனம் செலுத்துகின்றோம். உண்மையில், தேசிய முன்னணியுடன் கூட்டணியில் இருந்த போது அக்கட்சி எங்களை நடத்திய முறையைக் கண்டு நான் கவலை அடைந்தேன்,” என்று கேவியஸ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விஸ்மா மைபிபிபியில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்திற்கு கேவியஸ் தலைமைத் தாங்கினார். அந்தக் கூட்டத்தில் 22 உச்சமன்ற கூட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

அந்தக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ காந்தி முத்துசாமி மூத்த உதவித் தலைவராகவும், டத்தோ ஸக்காரியா அப்துல் ரஹ்மான், டத்தோ சந்திரகுமணன், டத்தோ சோம சுந்தரம் மற்றும் டத்தோ கில்பெர்ட் கோ கியான் ஆகியோர் உதவித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags: join Mubibi Party Pakatan Kevin

<< RELATED MALAYSIA NEWS>>

*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!

*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!

*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!

*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..!

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

<< RELATED MALAYSIA NEWS>>