(IPL 2018 Final fixed Leaked Hotstar video)
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி தகுதிபெற்றுள்ளதுடன், மற்றுமொரு இடத்துக்கான போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கான அணி ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ காணொளி இணையத்தளம் ஹொட்ஸ்டார்.
இந்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளியொன்றின் விளைவாகவே ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்றவகையில், காணொளியொன்றை உருவாக்கி ஹொட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு பாரியளவிலான ரசிகர் பட்டாளம் இருப்பதால், ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் தோல்வியுறும் எனவும், ஆட்ட நிர்ணயத்தின் படி இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளே மோதும் என ரசிகர்கள் டுவிட்டரில் பரவலான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது ஹொட்ஸ்டார் வெளியிட்டுள்ள இந்த காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
காணொளி இதோ…
Hotstar Predicted IPL Final So Early CSKvKKR Lmao ????
Fixed? pic.twitter.com/TxwgW596A3— Sharan (@hanjiokay) May 23, 2018
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் : அறிவிக்கப்பட்டது மே.தீவுகள் அணிக்குழாம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- நெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்!
<<Tamil News Group websites>>